யாழ் தீவகம் வேலணையில் அமைந்துள்ள பிரதேச மருத்துவ மனையின் மருத்துவர்களுக்கும், உள்ளூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பு ஒன்று கடந்த 14/12/2015 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு இடம் பெற்றது.
இச்சந்திப்பில் வேலணை பிரதேச மருத்துவ மனையினை ( B ) தரத்திற்கு தரமுயர்த்துதல் தொடா்பாகவும் ,மேலும் முன்பு இயங்கி பின்னர் செயலிழந்துள்ள மருத்துவ மனையின் அபிவித்திச் சங்கத்தைமீளவும் செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் இங்கு நிலவி பணியாளர்பற்றாக்குறை பற்றி -வடமாகாண சுகாதார அமைச்சருடனோ அல்லது சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனோ கதைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.
இங்கு மாதந்தோறும் 3500 தொடக்கம் 4500வரையான நோயாளர்கள் வரை சிகிச்சை பெறுகின்றனர்-என்றும் கிழமையில் நடைபெறும் கிளினிக்கில் 500இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு ஒரேயொரு தாதி மட்டுமே பணிபுரிந்து வருகின்றார் என்றும்- இவர் பகல் வேளை மட்டுமே பணியாற்றுவதனால்- இரவில் தாதியா் இல்லாமையால் விடுதியில் தங்கி சிகிச்சை பெறுவாேர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
அதுமட்டுமின்றி இரவில் அவசர சிகிச்சைபெற வருவாேரும் பாதிக்கப்படுவதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு பணிபுரிந்து வரும் தாதி விடுமுறை எடுப்பதிலும் பெரும் சிரமத்தை எதிர் காெள்கின்றார் என்றும் இவரின் வெற்றிடத்திற்கு வேறு ஒருவர் இல்லாமையால் காரணம் என்று மேலும் தெரிய வருகின்றது.
இம் மருத்துவ மனையானது தற்போது ( C )தரத்திலேயே இயங்கி வருகின்றது.ஆனால் இதன் சேவையானது ( B )தரத்திலேயே வழங்கப்படுகின்றது. இதன் தரம் ( C ) தரத்தில் உள்ளதால் இங்குவரும் வழங்கள் போதுமானதாகவில்லை என்றும்-இவ்வைத்தியசாலையின் தரத்தை(B) தரத்திற்கு-இவ்வூர் மக்களுக்கு சேவை வழங்க முன்வர வேண்டும் என்று இச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.
இவ்விடையத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்படுத்த வேண்டும் என இவ்வூர்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.