யாழ்ப்பாணத்தில் பணக்கார கல்லூரிகளில் யாழ் இந்துக் கல்லூரியே முன்னிலை வகிக்கின்றது. கல்வியிலும் இதுதான் முதல்வன்.
இதேபோல் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களில் அதிகமானவற்றில் உயர்மட்டத்திலும் சரி,கீழ் மட்டத்திலும் சரி இக்கல்லூரியின் பழைய மாணவர்களே அதிகமாகவுள்ளனர்என்பது உண்மை.
இனி விடையத்திற்கு வருவோம். இக்கல்லூரியின் அழகே அழகு ஆனால் இக்கல்லூரியின்வளாகத்தை பிரித்து ஊடறுத்து செல்லும் வீதியானது அழகாக காபற் போடப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.ஆனால் சிறிதாக மழை பெய்தால் போதும் இவ்வீதியில் மழைநீரானது சிறிய குளம்போல் காட்சி தரும்.மழை நீர் வடிய இரண்டு-மூன்று தினங்களுக்கு மேலாகும்.
இவ்வீதியில் தேங்கி நிற்கும் மழைநீரினால், பாடசாலை வரும் மாணவர்கள் உட்பட இவ் வீதியால் பயணிக்கும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வீதியின் இரு கரைகளில்மழைநீர் வழிந்தோடக்கூடிய மாதிரியாக வாய்க்கால் எதுவும் அமைக்கப்படவில்லை.மேலும் இவ்வீதியின் இரு மருங்கும் சீமெந்து சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வீதியானது யாழ் மாநகர சபையின் ஆழுகைக்கு உட்பட்டது .
இவ்விடையத்தை சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து நடைவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.