
அல்லைப்பிட்டி விவசாயிகளினால் கடந்த சில வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட-நெற்செய்கையினை கட்டாக்காலி கால்நடைகள் தொடர்ந்து அழித்து வருவதாக விவசாயிகள் பெருங்கவலை கொண்டுள்ளனர்.
இவ் வருட நெல் விதைப்புக்கு முன்னர் -விவசாய உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற-கூட்டத்தில் போது கீழ் வரும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன-
அவையாவன…
காலபோக நெற்செய்கையின் போது வேலி அடைக்காமல் நெல் செய்வது என்றும் கட்டாக்காலிகளைப் பிடிப்பதற்கு ஆட்களை நியமித்து கட்டாக்காலிகளைப் பிடிப்பது என்றும் வளர்ப்பு கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டி வளர்க்க வேண்டுமென்றும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வளர்ப்புக் கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.ஆனால் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் கட்டாக்காலிகள் பயிர்களை அழித்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கடன்பட்டு நெற்செய்கையை மேற்கொண்டுள்ள நிலையில்-அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த மழை வெள்ளத்தால் ஒருபகுதி அழிந்த நிலையில் மீதியை கட்டாக்காலிகளிடமிருந்து பாதுகாக்க முடியாத நிலையில் விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர் .இவ்விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கின்றோம்.