யாழ் தீவகம் வேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவில் அமைந்துள்ள பிரதேசசபையின் உப அலுவலக வளாகத்தினுள் பொதுச்சந்தை ஒன்று அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இச்சந்தை அடுத்த வருட முற்பகுதியில் செயற்படத் தொடங்கும் என தெரிவிக்கப்படுவதுடன் இங்கு உள்ளூர் விவசாய உற்பத்திப் பொருட்களுடன் மேலும் கடலுணவுப் பொருட்களும் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலணை பிரதேசசபையின் தற்போதைய செயலாளராக-மண்டைதீவைச் சேர்ந்த,திரு இராஜகோபால் அவர்களே பதவி வகித்து வருவதுடன்-அவரின் கீழேயே வேலணை பிரதேசசபை இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.