யாழ் தீவகம் மண்கும்பானிலும் ,வேலணையிலும் பல மில்லியன் ரூபாக்கள் செலவில் பாரிய இரண்டு தண்ணீர் தாங்கிகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைமடு குடிநீர்த்திட்டத்திற்
தற்போது மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியிலும், வேலணையிலும் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் மேலும் நிலத்தின் கீழ் குளாய்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்குளாய் பொருத்தும் பணிகள்-தற்போது அல்லைப்பிட்டி கிழக்குக் கடற்கரை வரை சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
வீதி ஓரத்தில் குளாய்கள் புதைப்பதற்கு வெட்டப்பட்ட குளிகள் மூடப்பட்டுள்ள போதிலும் -அல்லைப்பிட்டி-மண்கும்பான் ஊடாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி மூடப்பட்டுள்ள இக்குளிகளுக்குள் புதைந்து விபத்துக்குள்ளாவதாக எமது இணையத்திற்கு புகைப்பட ஆதாரங்களுடன் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.