தென்னிலங்கையிலிருந்து நயினாதீவை, நோக்கி வரும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதற்கென-முன்னாள் ஆளுநர் சந்திரசிறி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டு-ஆரம்பிக்கப்பட்ட தங்குவிடுதியின் கட்டிடப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாடிகளைக் கொண்ட-இவ்விடுதியானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதாகவும் – விரைவில் யாத்திரிகர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
தீவக பிரதான வீதியினை அண்மித்து- மண்கும்பான் எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இவ்விடுதி அமைந்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.