வேலணையில் கடற்படையினரின் வாகனம் மோதி பாடசாலை மாணவி பரிதாப மரணம்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

வேலணையில் கடற்படையினரின் வாகனம் மோதி பாடசாலை மாணவி பரிதாப மரணம்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை மேற்கு  சரவணைப் பகுதியில் இடம் பெற்ற வீதிவிபத்தொன்றில் பாடசாலை மாணவி ஒருவர்     பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
நாரந்தனை வடக்கு ஜே.55ஐ சேர்ந்த உஷாந்தி உதயகுமார்  (வயது – 15) என்ற பாடசாலை மாணவியின் மீது  கடற்படையினரின்  பேருந்து  ஒன்று மோதியதாலேயே  மாணவி பலியானதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வேலணை மேற்கு நடராஜா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இம்மாணவி பாடசாலை செல்லும் போதே வழியில் விபத்தில் சிக்குண்டு பலியானதாகவும்- இச்சம்பவத்தினை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த சரவணை பிரதேச  அரச உத்தியோகஸ்தர்களும், வேலணை பிரதேச செயலரும்  சம்பவம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டனர் என்றும், மேலதிக விசாரணைகளை தீவக பொலிசார்    மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

dr hf hy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux