இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்-படித்துப் பாருங்களேன்!

இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்-படித்துப் பாருங்களேன்!

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்னும் எங்களுடன், சிகிச்சை உண்டு எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டதின் பணிப்பாளரும் வைத்தியருமான சிசிர லியனகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எச்.ஐ.வி என்ற வைரஸானது கண்டுப்பிடிக்கப்பட்டு உலக நாடுகள் இவ்வருட முடிவுடன் முப்பது வருடத்தை கடந்துள்ளது. அந்தவகையில் எச்.ஐ.வி என்ற வைரஸ் ஒரு நபரின் சில செயற்பாடுகளினால் இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்டமையினால் அது எயிட்ஸ் என்ற ரீதியில் பாலியல் நோயாக கண்டறியப்பட்டதோடு இன்று உலக நாடுகள் அனைத்து குறிப்பிட்ட இந்த பாலியல் நோயினை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

இவ்வாறான நிலையில் எமது நாட்டில் கடந்த காலங்களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும் இன்று அந்த தொகையானது அதிகரித்த மட்டத்தை கொண்டுள்ளதாக கடந்தகால அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை இலங்கையில் தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதோடு மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ்நோய் தொற்றினால் எமது நாட்டில் வாரத்திற்கு 9 பேர் இனங்காணப்படுகின்றனர். அந்தவகையில் இதுவரை நாடளாவிய ரீதியில் 2241 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுகின்றனர்.

எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாம் நாடளாவிய ரீதியில் இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினால் தற்போது குறித்த நோய்குறித்து  பரிசோதனைகளை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்திய பரிசோதனைகள் மூலம் உரிய சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்று வரும் நிலையில் அது ஏனைய நபருக்கு பரவுவதை தடுப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதோடு அவரின் குறித்த செயற்பாடு காரணமாக முழு சமூகமே பாதுகாக்கப்படும். மறுபுரம் அவரும் சாதாரண வாழ்கையினை தொடர்வதற்கான சந்தர்ப்பங்களும்காணப்படுகின்றது. எனவே எயிட்ஸ் நோய்குறித்து அனைவரும் மிகவும் தெளிவுடன் செயற்படுவது அவசியமானது என்றார்.

குறித்த செயல்அமர்வின் போது எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று சதாரணமான மனிதர்கள் போல் தனது வாழ்கை கொண்டு நடத்தும் சிலரின் அனுபவங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்கது.

HIV-in-SL

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux