அண்மையில் தொடர்ந்து பல நாட்களாகப் பெய்த கடும் மழையினால் -யாழ் தீவகப்பகுதியெங்கும் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
வருடாவருடம் மாரிமழைக்கு மழைநீர் தேங்கி நிற்பது வழமையான ஒன்றாகவே இருந்தாலும்-இம்முறை மழை அதிகமாகவே பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இம்மழை வெள்ளத்தினால் ஏற்கனவே வறுமையில் வாடும் மக்களே மேலும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியவர்களாகவுள்ளனர் என்று தெரிய வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால்-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-நயினாதீவு ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளதுடன்-மேலும் வேலணை விவசாயிகளின் மனக்கவலையினையும் கீழே பதிவு செய்துள்ளோம்.
இதனால் மேலதிக மழைநீர் வெளியேறுவது தடைப்பட்டு தோட்ட நிலங்கள் யாவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
தமது கையிலிருந்த பணம் முழுவதையும் நம்பிக்கையோடு விவசாயத்தில் முதலீடு செய்து விட்டு-ஏங்கி நிற்கும் விவசாயிகளுக்கு யார்மூலம் விடிவு கிடைக்கும் .