அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-19.11.2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள-03 சிறுமிகளின் பெயரில்-அவர்களின் எதிர்கால நலன் கருதி முதற்கட்டமாக தலா 3000 ஆயிரம் ரூபாக்கள் இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்டது.
இந்தச் சிறுமிகளின் தாய்மார்கள் மூவரும்,கோர யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு இன்றைய தினம் அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் நினைவாக மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் தீவகத்திலிருந்து கிளிநொச்சிக்குச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!