பாரிஸ்  Saint-Denis பகுதியில் தீவிரவாதிகள் மீது   தாக்குதல்: மனித வெடிகுண்டுப்பெண்- மோப்பநாய் உட்பட மேலும் ஒருவர் பலி!

பாரிஸ் Saint-Denis பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல்: மனித வெடிகுண்டுப்பெண்- மோப்பநாய் உட்பட மேலும் ஒருவர் பலி!

பிரான்ஸின் தலைநகர் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை கைது செய்ய பிரான்ஸ் அதிரடிப் படை போலீஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் அவர்களின் மறைவிடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, கடுமையான துப்பாக்கிச் சமரும் குண்டு வெடிப்பும் இடம்பெற்றுள்ளது.

சண்டையின் போது பெண் உட்பட 2 பேர் பலியாகினர். பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு வெடித்துச் சிதறினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் போலீஸார் குவிந்தனர். அங்கு தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் குடியிருப்புப் பகுதியினை போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த போலீஸ் ஆபரேஷன் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் இத்தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தப் பகுதி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 15-ம் தேதி பயங்கரவாதிகள் 6 இடங்களில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 128 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர்.

பாரீஸில் இசை அரங்கம், கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சிரியா – இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

பாரீஸ் தாக்குதலை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பிரிவு தலைமையேற்று நடத்தியுள்ளது.

அந்த நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல் பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெல்ஜியத்தில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உள்ளார்.

சிரியாவில் உள்ள முகாமில் அவரது தலைமையில்தான் பாரீஸ் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 27 வயதாகும் அவரைப் பிடிக்க பிரான்ஸ் உளவுத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில், அப்துல் ஹமீது செயின்ட் டெனிஸ் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

040302000112274424_908588909232394_4739297056523967105_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux