தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது.
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான செவ்வாய்கிழமை முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
அந்த வகையில் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலிலும் மிக உக்கிரமான சூரன் போர் இடம்பெற்றது.சூரன் போரைத் தொடர்ந்து இடம்பெற்ற தீமிதிப்பில் பயபக்தியோடு பக்தர்கள் தீயில் இறங்கி முருகப்பெருமானின் பேரருளைப் பெற்றுய்தனர்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.