யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கனகரெட்ணம் அவர்கள் 12-11-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குழியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் ஈமைக்கிரியை,நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கும் அஞ்சலிக்கும் கீழே இிணத்துள்ளோம்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மினாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷாந்தினி(பிரான்ஸ்), விமல்ராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றெக்னோ(பிரான்ஸ்), பிரதீபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி, இரத்தினகிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ராகினிதேவி(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி(சுவிஸ்), கலியுகவரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கசிவம், ராஜலிங்கம், குழந்தைவேலு, மற்றும் சுந்தர்லிங்கம்(இலங்கை), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), புகளேந்திரன்(இந்திரன்- சுவிஸ்), மாலினி(பிரான்ஸ்), பத்மநாதன்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), குணராணி(நெதர்லாந்து), சிவகுமார்(நோர்வே), திருப்புவனன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சூரியகலா(இலங்கை), மதிவர்ணன்(இலங்கை), மகாதேவன்(பிரான்ஸ்), சந்திரகலா(இலங்கை), இந்திரகலா(நோர்வே), மகிந்தன்(பிரான்ஸ்), விஜயேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வியேந்திரா, சுவேந்திரா(பிரான்ஸ்), சத்தியரூபன்(பிரான்ஸ்), காந்தரூபன்(இலங்கை), தனுசலா(இலங்கை), சுதர்சன்(பிரான்ஸ்), கார்த்திகா(லண்டன்), காலஞ்சென்ற தினேஸ், கபின்ராஜ்(பிரான்ஸ்), அருண்ராஜ்(பிரான்ஸ்), அபின்ராஜ்(பிரான்ஸ்), மிதுலா(சுவிஸ்), மிதுனன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவின்(பிரான்ஸ்), பிரதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
றெவின்(பிரான்ஸ்), ஆஷிகா(பிரான்ஸ்), அக்ஷனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
விஜயேந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்சுவேந்திரா(மருமகள்)-பிரான்ஸ் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!