இலங்கையின் வடக்கு,கிழக்கில் இடைவிடாது தொடரும் கடும் மழை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன், தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி அலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன்-சிவபுரம் என்னும் கிராமம் முழுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் கிளிநொச்சி, அழகரத்தினம் வீதியில் வசிக்கும் 37 வயதுடைய சின்னத்தம்பி ஜோகலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் இவர் நேற்றைய தினம் மாடு மேய்க்கச் சென்றிருந்த போது காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும்- இன்றைய தினம் கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடுக் குளப்பகுதியிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.