அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு(திதி)08.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வன்னியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் ஆச்சிரமத்து மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது.
அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் மேல் பேரன்பும் மதிப்பும் கொண்ட-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது மகாதேவா ஆச்சிரமத்திற்குச் சென்று சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனிடம்-அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!