அல்லைப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை
வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்கள் 21-07-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். 
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-23-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அன்று மாலை அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தின் செய்தியாளரினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம். 

அன்னார் தற்போதய அல்லைப்பிட்டி உப தபால் அதிபர் திருமதி தவநாயகி(கீதா)மகாலிங்கம்-மற்றும் திரு அருந்தவம்-திரு உதயன்-திரு தெய்வம் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அனுதாபம் தெரிவிக்க தொலைபேசி இலக்கம்-0094772719584

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

 

மண்மணம் மாறாது எங்கள் கிராமத்து நிகழ்வுகளோடு மூன்று வருடங்களாக உங்கள் முன் வலம் வரும் அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த ஆதரவினை நல்குமாறு பணிவோடு வேண்டுகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux