சிறைச்சாலைகளில் கைதிகள் கொல்லப்படும் அவலம் தொடரக்கூடாது- நீதிபதி இளஞ்செழியன்-வீடியோ இணைப்பு!

சிறைச்சாலைகளில் கைதிகள் கொல்லப்படும் அவலம் தொடரக்கூடாது- நீதிபதி இளஞ்செழியன்-வீடியோ இணைப்பு!

யாழ் சிறைச்சாலை திறப்பு விழாவில் உரையாற்றிய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் கூட கைதிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் நடந்த சம்பங்களை போல இனிமேல் நடக்க கூடாது என அவர் தெரிவித்தார். நீதிபதிகளின் உத்தரவின் பேரிலேயே கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றனர். அப்படி தடுத்து வைக்கப்பட்டவர்கள்தான் சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு 53தமிழ் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர். 2013ஆம் ஆண்டு 25 சிங்கள கைதிகள் கொல்லப்பட்டனர். அதேஆண்டு வவுனியாவில் 3 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர் என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

Ilancheliyan-

Leave a Reply