எகிப்தில் ரஷ்யா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது- 17 குழந்தைகள் உட்பட 224 பேர் பலி!

எகிப்தில் ரஷ்யா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது- 17 குழந்தைகள் உட்பட 224 பேர் பலி!

எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணித்த 17 குழந்தைகள் உட்பட 224 பேரும் பலியாகி உள்ளனர். இதுவரை சம்பவ இடத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்ட போதும் அனைவருமே உயிரிழந்துவிட்டதாக எகிப்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எகிப்தின் செங்கடலை ஒட்டிய ஷாம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு இன்று 224 பயணிகளுடன் ரஷ்யாவுக்கு சொந்தமான கோகலிமாவியா நிறுவன விமானத்தின் ஏர்பஸ் ஏ-321 விமானம் புறப்பட்டுச் சென்றது. எகிப்தின் ஷினாய் தீபகற்ப பகுதியில் அந்த விமானத்தின் தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து துருக்கி நாட்டு விமான நிலையத்தை விமானிகள் தொடர்பு கொண்டதாக தகவல்கள் முதலில் வெளியாகின. மேலும் ரஷ்யா நோக்கி அந்த விமானம் பாதுகாப்பாக வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், ரஷ்யா விமானம் ஷினாய் தீபகற்ப பகுதியில் நடுவானில் வெடித்து சிதறிவிட்டது. இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் விமானம் விபத்தில் சிக்கியதா? இல்லையா என்ற குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் தற்போது ஷினாய் தீபகற்ப பகுதியில் நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடுவானில் இரண்டாக வெடித்தது..

இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த ஷினாய் தீபகற்ப பகுதிக்கு எகிப்து மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். விமானம் நடுவானில் இரண்டாக உடைந்து நொறுங்கி கீழே விழுந்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்னும் 224 பேருமே உயிரிழந்துவிட்டதாக எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்31-1446284851-russian-airliner-s-600 BBmExbl 31-1446283593-ismap-600

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux