வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், திங்கள் காலை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். கொடிகாமம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய அருள்ராஜா ஜோன் அஜித் மற்றும் சண்முகசிங்கம் டினா ஆகிய இருவரின் சடலங்களும் கரைஒதுங்கி உள்ளது.
மீன் வாங்கச்செல்வதாக கூறி நண்பரிடம் மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு கடலில் குளிக்கச் சென்ற போதே இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அருள்ராஜா ஜோன் அஜித் என்பவருடைய சடலம் குடாரப்பு கடற்கரையிலும் சண்முகசிங்கம் டினா என்பவருடைய சடலம் நாகர்கோவில் கிழக்கு கடற்கரையிலும் கரைஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.