யாழ் தீவகம் அனலைதீவில், முதியோர்களை கௌரவித்து -அவர்களை முன்னிலைப்படுத்தி புத்தக வெளியீடு ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
அனலைதீவைச் சேர்ந்த திரு.த.நாராயணன் அவர்களின் “அடியேன் குறள்” எனும் புத்தக வெளியீட்டு விழாவே 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனலைதீவில் வசிக்கும் மூத்த தலைமுறை மூதாட்டி திருமதி.நமசிவாயம் செல்லமுத்து அவர்களிடம் முதல் பிரதி வழங்கப்பட்டு அவரின் ஆசி பெறப்பட்ட பின்னர்-ஊரில் உள்ள முதியவர்களுக்கு புத்தகப்பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் முதியவர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
அனலைதீவில் வசிக்கும் முதியவர்களிடம் ஆசிபெற்று நடத்தப்பட்ட-இப்புத்தக வெளியீட்டு விழாவில் பொதுமக்களும் இளையவர்களும் பெருமளவில் கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-அனலைஅறநெறி