யாழ்-தீவக பிரதான வீதியிலிருந்து -அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதிக்குச் செல்லும் வீதி ஊரி போட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தீவக பிரதான வீதியினையொட்டி அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த,பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப்பக்கமாகப் பிரிந்து வைரவர் கோவிலடியால் ஊர்மனைக்குள் செல்லும் இவ்வீதியே புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
இவ்வீதியின் ஊடாக வாகனப் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலையிலே-நீண்ட காலமாக காணப்பட்டிருந்ததாகவும்- தற்போது இவ்வீதி புனரமைப்பு செய்யப்பட்டதனால்- வாகனங்கள் எதுவித சிரமமும் இன்றி பயணிக்க முடியும் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.