மண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு மின்சாரம்,முன் மண்டபம் அமைக்க மேலும் நிதி வழங்கிய பக்தர்கள்-பெயர் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு மின்சாரம்,முன் மண்டபம் அமைக்க மேலும் நிதி வழங்கிய பக்தர்கள்-பெயர் விபரங்கள் இணைப்பு!

20150920_160128

அந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று குடமுழுக்கு சங்காபிசேகம் என்பன அண்மையில்   இனிதே நடந்து முடிந்த இவ்வேளையில்  ஆலய  திருப்பணிக்காக நிதி  உதவிய  அடியவர்கள் அனைவருக்கும் முதலில் எமது  பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்று தோட்ட வெளியில் சிறு கொட்டகையாகவிருந்த இவ்வாலயம்-இன்று அழகான வேலைப்பாடுகளுடன் கட்டிமுடிக்கப்பெற்று- கும்பாவிசேகம் , சங்காபிசேகம் ஆகியவை நடத்தப்பட்டதனையும்   இணையத்தளங்கள்  மூலமாக நீங்கள் பார்த்து  மகிழ்ந்து  இருப்பீர்கள் என நாம் முழுமையாக  நம்புகின்றோம் .

இருப்பினும் தற்போதைய  நிலையில் தினமும் ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு இம்மண்டபம்  போதுமானது -ஆனால்  விசேடமான தினங்களில் குறிப்பாக  சித்திரா பௌர்ணமி (பறுவம் ) விசாகப் பொங்கல் , பூம்புகார் கண்ணகை அம்பாள்  ஊர்வலம் , அத்துடன் தொடர்ந்து வருடா வருடம்  நடைபெற இருக்கும் சங்காபிசேகம் போன்ற தினங்களில் பக்தர்கள் நின்று வழிபட இடவசதி போதுமானதாக இல்லை.

இவ் ஆலயத்தில் நடந்து முடிந்த கும்பாபிசேக நாட்களுக்கு சிறிதாக ஒரு கொட்டகையினை  வாடகைக்கு  அமர்த்தியமைக்கு நாற்பத்தி ஐயாயிரம்  இலங்கை ரூபாக்கள் செலவாகியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது- எனவே  இவ் ஆலயத்திற்கு ஓர்  தரிசனமண்டபம் தவிர்க்கமுடியாத அவசியமாக உள்ளது . இம் மண்டபத்தை கட்டி முடிப்பதற்கு  ஏறத்தாள  எட்டு லட்சம்  இலங்கை ரூபாகள்  தேவையென  மதிப்பிடப்பட்டுள்ளது ,(கும்பாவிஷேகம்  நடை பெற்று 14 வருடங்கள் சங்காபிசேகம்  இடம் பெற்ற  பின்பு தான் மீண்டும் கும்பாவிசேகம் நடைபெறும் என்பது நீங்கள் அறிந்ததே அதன்  அடிப்படியில்  மேற்  குறிப்பிட்ட விசேட தினங்களுக்காக இந்த  மண்டபத்திணை  அமைக்க  நாம் முன்  வந்துள்ளோம் .)

அதற்கு வேண்டிய  நிதி உதவியினை வழங்க முன் வருமாறு உரிமையோடு புலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் அடியார்களிடம் மிகவும்  பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம் .

சாம்பலோடை கண்ணகை அம்மன்  பரிபாலசபையினர் .

மேலதிக தொடர்புகளுக்கு …

திரு க . வசீகரன் தலைவர் இலங்கை .0094 776120900

திரு சி . ஜெயசிங்கம்  கனடா ..(1416) 319 0409.

திரு சி . சிவ ஸ்ரீகுமாரன்  சுவிஸ் ..(4143) 4999362.

மேற்படி  அமைக்கப்படவுள்ள முன் மண்டபத் திருப்பணிக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ள  பக்தர்களின்  விபரங்கள் பின் வருமாறு …..

01) திரு சி . ஜெயசிங்கம்  -கனடா ——50,000.இலங்கை ரூபா

02) திரு செ. இந்திரன்  -லண்டன் ——-50,000.இலங்கை ரூபா

03)  திரு பொ. சத்தியமூர்த்தி -ஜெர்மனி————50,000.இலங்கை ரூபா

04) திரு சி . ஸ்ரீகுமாரன் -சுவிஸ்———————50,000.இலங்கை ரூபா

05) திரு சி . யகுலநாதன் -கனடா——————-50,000.இலங்கை ரூபா

06) திரு லி . வீரராகவன் -சுவிஸ்——————-50,000.இலங்கை ரூபா

07 )திரு புண்ணியகாந்தன் சுதாகரன் லண்டன்———

08) திரு சேதுராசா  ஜெயதரன்-சுவிஸ்————

09)திரு தேவராசா தேவசீலன்-சுவிஸ்———–

10) திரு ஜயாத்துரை கமலநாதன்-சுவிஸ்————–

11)திரு நடனசபாபதி ஜயந்திரன்-சுவிஸ்——————

12 )திரு தருமலிங்கம் ஜெயக்குமார்-கனடா—————

13)திரு இராசரத்தினம் பரதன்-இந்தியா———————-

15)திரு சிற்றம்பலம் ஸ்ரீகோபால்-டென்மார்க்——————

கடந்த சில வாரங்களுக்கு முன்னர்-சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முழுமையான மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக -ஆலய பரிபாலன சபையினரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

gh-3

20150920_155841image-196b28f1cb11dde6f0154829c25dd1e44514ff88375da4983653dff1da90f67e-Vimage-703552fd741e66722ee240daa5b7acc2631b5681b499a85fdf66fe261127629f-Vimage-bebef3f865c3546b9a735a1c335d3008155693f4b5b3e051293b243ce986aa77-V

Leave a Reply