யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டபம் அமைப்பதற்கான விநாயகப் பெருமானின் திருவருள் கூடி வந்துள்ளதனையடுத்து-வில்லுமண்டபம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் வில்லுமண்டபம் அமைப்பதற்கான பணிகளினை நிறைவேற்றுவதற்கான விஷேட திருப்பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன்-உள்ளூரிலும்,புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும்-வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதி திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற் கட்டமாக புலம்பெயர் நாடுகளில் திரட்டப்பட்ட நிதி பற்றிய விபரங்களின் பகுதி -01 மேலே இணைக்கப்பட்டுள்ளது.
விரைவில் உள்ளூரில் நிதி வழங்கிய பக்தர்களின் பெயர் விபரங்களுடன்-புலம்பெயர் நாடுகளிலும் இனி நிதி வழங்கவுள்ள பக்தர்களின் பெயர் விபரங்களையும் இணைத்து பகுதி.02 வெளிவரும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நீங்களும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப் பிரமாண்டமாக அமையவுள்ள வில்லுமண்டபத் திருப்பணிக்கு நிதி வழங்கி,விநாயகப்பெருமானின் பேரருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
உள்ளூர்த் தொடர்புகளுக்கு…வில்லுமண்டபத் திருப்பணிக்குழு-மண்கும்பான்
புலம்பெயர்நாடுகளின் தொடர்புகளுக்கு…….
திரு ஏரம்பமூர்த்தி ஈசன்-லண்டன்
தொலைபேசி இலக்கம்...00447726593610