யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டபம் அமைப்பதற்கான விநாயகப் பெருமானின் திருவருள் கூடி வந்துள்ளதனையடுத்து-வில்லுமண்டபம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வில்லுமண்டபம் அமைப்பதற்கான பணிகளினை நிறைவேற்றுவதற்கான விஷேட திருப்பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன்-உள்ளூரிலும்,புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும்-வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதி திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்களும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப் பிரமாண்டமாக அமையவுள்ள வில்லுமண்டபத் திருப்பணிக்கு நிதி வழங்கி,விநாயகப்பெருமானின் பேரருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.