அண்மையில் வெளியாகியுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மண்டைதீவு R.C . பாடசாலையில் சித்தி பெற்ற-மூன்று மாணவர்களுக்கு- கடந்த ஞாயிறு 11.10.2015 அன்று மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில்- யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்கள் கலந்து கொண்ட விஷேட திருப்பலியின் போது பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே போல் மண்டைதீவு மகாவித்தியாலயத்திலிருந்தும் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்-அவர்களுக்கும் புலம் பெயர் மண்டைதீவு மக்களால் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு புனித இராயப்பர் ஆலயத்தில் 07/10/2015 செபமாலை அன்னை விழாவும் மாபெரும் செபமாலை பேரணியும் இடம்பெற்றது.
ஆலயத்திலிருந்து புறப்பட்டு மண்டைதீவுச்சந்திக்கருகில் அமைந்துள்ள சுருபத்தை சென்றடைந்து அங்கு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.
சிறுவர்களினால் தயார் செய்யபட்ட பெரிய செபமாலை தாங்கி பேரணியில் கொண்டு செல்லபட்டது. மண்டைதீவு பங்கு மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து சிறப்பித்தார்கள்.