பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply