பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,மகாதேவா மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,மகாதேவா மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ss (2)

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,ஒரு தொகுதி புத்தகங்கள்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் ஆச்சிரம மாணவர்களுக்கு கடந்த 03.10.2015 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டத்திட்டத்தின்  துணை நூலாக,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால் உருவாக்கப்பட்டுஆசிரியர்கள்,மாணவர்களின் பெரும்பாராட்டைப் பெற்ற-புத்தகங்களின் ஒரு தொகுதியே,மகாதேவா ஆச்சிரம மாணவர்களின் நலன் கருதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 03.10.2015 அன்று கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் ஆச்சிரமத்திற்கு நேரடியாகச் சென்ற கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-தான் எழுதி வெளியிட்ட நூல்களின் ஒரு தொகுதியினை பொறுப்பாளரிடம் வழங்கி விட்டுத் திரும்பியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x (3) x (2) x (1) 111 (42) 111 (39)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux