கிளிநொச்சியில் வயல் உழுத ஜனாதிபதி மைத்திரி-தமிழர் மனங்களையும்உழுது வெல்லுவாரா?படங்கள் வீடியோ விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் வயல் உழுத ஜனாதிபதி மைத்திரி-தமிழர் மனங்களையும்உழுது வெல்லுவாரா?படங்கள் வீடியோ விபரங்கள் இணைப்பு!

பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தி திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து வட மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாட்டிற்கு சௌபாக்கியத்தையும் சமாதானத்தை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தனக்கு இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

img_3759 img_3655 IMG_1576 img_3783

இதேவேளை கிளிநொச்சியில், இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 476 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவில் 137 ஏக்கர் காணிகளும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்டது.
உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை, கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் ஆரம்பித்து வைத்த பின்னர், இந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய காணிகளை, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகமூடாகவும் முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய காணிகளை மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனூடாகவும், காணி உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கும், போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்குமாகவே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கின்றோம்.

சமகாலத்தில் இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய பல உ ணவுப் பொருட்களை நாம் வெளிநாடுகளிடமிருந்து, இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக 2004ம் ஆண்டு நாம் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட் களை 6 ஆயிரம் கோடி ரூபா பணத்திற்கு இறக்குமதி செய்திருக்கின்றோம்.

இதனை விட நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மிளகாயில் 80வீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை விட சோயா, கௌப்பி, பயறு உள்ளிட்டவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம்.

இதனால் விவசாயிகள் தொடர்ந்தும் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் 50வீதமான மக்கள் போஷாக்கான உணவு கிடைக்காமல் இருக்கின்றார்கள். இலங்கையில் 23வீதமான மக்கள் போஷாக்கு குறைபாட்டினால் உண்டாகும் நோய்களுக்குள்ளாகியிருக்கின்றார்கள்.

எனவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய அடுத்து வரும் 3வருடங்களில் உள்நாட்டு உற்பத்தியை உயர் மட்டத்திற்கு கொண்டுவரவேண்டும். விவசாயத்திற்கான நிலம் ஒரு அங்குலம் கூட செய்யை பண்ணப்படாமல் இருக்க முடியாது. அரசாங்க காணிகளாக இருந்தால் அவை  தொடர்பில் காணிக்குரிய திணைக்களம் அல்லது அமைச்சிடம் அரசாங்கம் அது குறித்துக் கேள்வி எழுப்பும்.

இதேபோன்று தனியார் காணியாக இருந்தால் அரசாங்கம் அதனைப் பெற்று,செய்கை பண்ணும் நிலை உருவாக்கப்படும். மேலும் முதலமைச்சர் வரவேற்புரை நிகழ்த்தும்போது பல விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எம்மை பொறுத்தவரையில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழவேண்டும். இந்நி லையினை உருவாக்குவதற்கு ஆக்கபூர்வமான பேச்சுக்கள்,அவசியமாகின்றது. எனவே அவ்வாறான ஆக்கபூர்வமான பேச்சுக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம்.

மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்ற இந்த திட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல மாகாண அரசாங்கத்திற்கும் பங்கு இருக்கின்றது. 13ம் திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரம், வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே அடுத்துவரும் 3வருடங்களில் இந்த திட்டத்தை வெற்றிகரமான ஒரு திட்டமாக மாற்றியமைப்பதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் இணைந்து செயலாற்றவேண்டும். என்பதுடன் மக்கள் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டங் களை உருவாக்க வேண்டும். இது தொடர்பில் நாம்,அடுத்துவரும் மாதங்களில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த் தை நடத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

நன்றி-தினக்கதிர் இணையம்

Leave a Reply