தீவகம் வேலணை கிழக்குப் பகுதியில் முன்னர் சிறப்பாக இயங்கி வந்த கலைமகள் சனசமூக நிலையம்-நீண்ட காலமாக செயலிழந்திருந்த நிலையில்-தற்போது மீண்டும் நிலையக் கட்டிடத்தைப் புனரமைத்து செயற்படுத்துவதற்கான கடும் முயற்சியில் நிர்வாகத்தினரும் நலன்விரும்பிகளும் முன் நின்று உழைத்து வருகின்றனர்.
மேலும் அரசாங்கத்தினால் இச்சனசமூக நிலைய புனரமைப்புக்கு என பத்து லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டதனைக் கொண்டும் -மேலும் நலன் விரும்பிகள் வழங்கிய நிதி உதவிகளுடன் இக்கட்டிடத்தின் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது- ஆனாலும் முழுமையாக கட்டிடத்தின் பணியினை முடிப்பதற்கு மேலதிக நிதி தேவைப்படுவதனால் புலம்பெயர் உறவுகளிடமிருந்தும் நிதியுதவியினை எதிர்பார்ப்பதாக விபரங்களுடன் எமது இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.