யாழ் தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலய மாணவர்கள் எதிர் வரும் 01-10-2015 வியாழக்கிழமை அன்று 4 நாட்கள் தென்பகுதிக்கு கல்விச் சுற்றிலா ஒன்றினை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பாடசாலை நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்விச் சுற்றுலா செல்வதற்கு வேண்டிய ( ஒரு இலட்சத்து எண்பது ஆயிரம் ரூபாக்கள் – 180000.00)நிதியினை இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையினரும்-மேலும் இலண்டனில் வசித்துவரும் இக்கிராமத்தை சேர்ந்த,இரு பாடசாலையின் நலன் விரும்பிகளும் இணைந்து வழங்கி உதவியுள்ளனர்.
நிதி வழங்கும் நிகழ்வானது 23-09-2015 புதன்கிழமை அன்று மகாவித்தியாலய அதிபரின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.சண்.வாமதேவன் அவர்களும் செயலாளர் திரு.மா.இளம்பிறையன் அவர்களும் கலந்துகொண்டு நிதியை வித்தியாலய முதல்வரிடம் வழங்கினர்.
இக்கல்விச்சுற்றுலாவில் சுமார் 70 மாணவர்கள் செல்லவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.