வாகன நெரிசலால் மூச்சுவிட முடியாமல் தவிக்கும் யாழ்ப்பாண மக்கள்

Click to open image!Click to open image!யாழ் மாவட்டத்துக்கு தற்போது அதிகளவான வாகனங்கள் வந்து செல்வதால் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவமும் தற்போது இடம்பெறுவதால் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த கால யுத்தத்தினால் அபிவிருத்தி அடையாமல் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த யாழ். மாவட்டத்தின் பல வீதிகளும் இன்னமும் விரிவாக்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன.

அங்கு வரும் வாகனங்களோ துரிதமாக நாள் தோறும் அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் யாழ். நகரில் உள்ள பெரும்பாலான வீதிகள் அனைத்துமே வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கின்றது. வாகன நெரிசல் காரணமாக மக்கள் குறித்த நேரத்தில் குறித்த இடத்தைச் சென்றடைய முடியாமல் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux