அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் முன் நின்று உதவி வருபவராகிய,எமது அன்புக்குரிய திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் அன்பு மைத்துனர் திரு தவஞானம் (அன்னலட்சுமி)அவர்கள் தமது 60வது பிறந்த நாள் விழாவினை கடந்த 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொலன்டில் தனது குடும்பத்தினர்-மற்றும் உறவினர்களுடன் எழிமையாகக் கொண்டாடினார்.
திரு தவஞானம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் வழிபாடுகள் இடம் பெற்றதுடன்-அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.-மேலும் அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழிற்பூங்கா இல்லத்தில் வசிக்கும் விழிப்புலன் இழந்தவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது-அத்தோடு மிக வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
திரு தவஞானம் அவர்கள்-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் அருளால் எல்லாச் செல்வங்களும் பெற்று-நோய் நொடியின்றி சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.
அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-திரு தவஞானம் அவர்களின் பிறந்த நாள் விழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளளோம்.