வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 17.09.2015 அன்று வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி- வேலணை பிரதேச செயலர் திருமதி சதீசன் மஞ்சுளாதேவி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், திருமதி இ.மோகனேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வாழ்வின் எழுச்சி மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு க.மகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச செயலக பிரதித்தி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தி.மீரா அவர்களும், வேலணை பிரதேச செயலக கணக்காளர் திரு இ.றமணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கண்காட்சியில் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் உற்பத்திப் பொருள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தாம் உற்பத்தி செய்த பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்தனர்.தொடர்ந்து மறுநாள் 18-09-2015அன்றும் இவ் விற்பனைச் சந்தை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.