யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவரான- திரு ஜேசுதாசன் அன்ரனிதாசன் (ஷோபாசக்தி) அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்து பிரான்ஸ் திரை அரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும்-தங்கப்பனை விருதினைப் பெற்ற- பிரஞ்சுத் திரைப்படமான தீபன் திரைப்படத்தில் நடித்துப் புகழ் பெற்றதனைப் பாராட்டி-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய அதிபரின் கையொப்பத்துடன் புகழ்மாலை ஒன்றுடன் மேலும் அல்லைப்பிட்டி கவிஞர் பாலன் சேவியர் அவர்களினால் வரையப்பட்ட புகழ்மாலை ஒன்றும் எமது இணையத்தில் பதிவு செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீபன் நாயகன் ஷோபாசக்தி புகழ் வாழ்க!
செந்தமிழின் சக்தி ஷோபாசக்தி
செந்தமிழ் இதழ் விரியும் சிந்தனைச் சொற்களம்
மங்காமல் ஊற்றெடுக்கும் எழுத்தறிவாளன்
அங்கமெலாம் அறிவூறும் ஆற்றல் மிக மைந்தனை
தங்கத் தமிழ் ஓசையினால் வாழ்த்தி சங்கே முழங்கு
எழுத்துருவைச் செதுக்குகின்ற எழுதுகோல் சிற்பி
அழுத்தமாகக் கருத்துரைக்கும் அறிவுப்பெருங்கடல்
செழுமை நலத்தோடு செய்திபல கூறிடும்
ஷோசக்தி புகழ் நீண்டுயர வாழ்த்துகின்றோம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நடை
அழுத்தமான கருத்துக்களின் ஆளம் எல்லாம் தனிநடை
துளித்துளியாக துல்லியமாய் பேனாவில் உகுக்கும் மையது
அழியாத புகழ்நிலையை எங்கெங்கும் பறைசாற்றும்
கேள்விக்குறிபோல் முதுகுளைய வளைந்திருந்து
கண்களை ஆனந்த மகிழ்ச்சியில் ஓடவிட்டு
ஆள்ஒவ்வொருவரும் போட்டி போட்டுப்போட்டு
ஆனவரையிலும் உன் படைப்பினைப் படிப்பது மகிழ்ச்சி
எழுதுகோல் பழுதறியாச் செங்கோல் என்று
எமது மூதாதையர் கூறிய விருதுவாக்கு
விழுதுவிடும் ஆல்விருட்சமாய் உன் படைப்புக்கள்
விடியலை தமிழ் உலகிற்குக் கட்டியங் கூறட்டும்
எட்டுத் திசையிலும் புகழ்மேவி வாழ்க
கட்டுக்குலையாத கருத்தாளங்கள் பெற்றுவாழ்க
தொட்டுத்தெறிக்கின்ற படைப்புக்கள் சிறப்புற வாழ்க
பொட்டிட்ட பொற்குடம்போல ஷோபாசக்தி புகழ் வாழ்க
ஆக்கம் – சந்தியபாலா