தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருந்திருவிழா 10.09.2015 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ஒன்பது தினங்கள் மாலை வேளைகளில்விஷேட வழிபாடுகள் நடைபெற்று- 19.09.2015 சனிக்கிழமை அன்று காலை -யாழ் மறைமாவட்ட ஆயர்வண.தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களின் தலைமையில் பெருநாள் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் சிந்தாத்திரை மாதாவின் திருசுரூப சுற்றுப்பவனி சிறப்பாக இடம்பெற்றது.
இம்முறை கடந்த வருடங்களை விட – பெருநாள் விழாவில் கலந்து கொள்ள- வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட தென்பகுதி வாழ் சிங்கள கிறிஸ்தவ மக்களும் பெருமளவில் வருகை தந்திருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் முழுமையான நிழற்படப்பதிவு ஆகியவற்றினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
வீடியோ மற்றும் நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….