அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் மணல் (ஒழுங்கை)வீதியாகக் காணப்பட்ட-அதாவது அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் ஆலமரத்தரடியில் ஆரம்பித்து பின்னர் கிழக்கு நோக்கித் திரும்பி-புனித பிலிப்புநேரியார் ஆலயத்திற்கு அருகால் கடற்கரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியினைத் தொட்டு நிற்கும்-மணல் வீதியே முழுமையான தார் வீதியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்வீதியினை வேலணை பிரதேச செயலகம் -வேலணை பிரதேசசபை ஆகிய இரண்டும் இணைந்தே தார் வீதியாக மாற்றிக் கொடுத்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.
அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரப் பகுதியிலேயே அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.