யாழ்  மன்னன் சங்கிலியனின் வாளில் coca cola விளம்பரமா?கொதித்தெழும் யாழ் மக்கள்-படம் விபரம் இணைப்பு!

யாழ் மன்னன் சங்கிலியனின் வாளில் coca cola விளம்பரமா?கொதித்தெழும் யாழ் மக்கள்-படம் விபரம் இணைப்பு!

யாழ் நல்லூர் முத்திரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் சிலை வாளில் coca cola குளிர்பான நிறுவனத்தின் விளம்பரப் பதாகை கட்டப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னன் சங்கிலியனின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் கம்பீரமாக வாளேந்திய நிலையில் சங்கிலிய மன்னனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சங்கிலிய மன்னன் ஏந்தியுள்ள வாளிலேயே குறித்த coca cola நிறுவன விளம்பரப் பதாகை பறக்க விடப்பட்டுள்ளது.

தமிழ் மன்னனின் வீரத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ள குறித்த coca cola குளிர்பான நிறுவனத்தின் செயற்பாடு வருந்தத்தக்கது என்றும் கண்டிக்க வேண்டியது என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். 

12036492_541621786000597_2698207958679187476_n 11149587_541621772667265_3555645271411889701_n f8ea2e8463760785106490befc78c339-Coca-Cola-Bottle-is-Half-Full

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux