யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09-09-2015 புதன்கிழமை கிளிநொச்சியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10.09.2015 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி-அனுப்பி வைக்கப்பட்ட-அன்னாரது ஈமைக்கிரியையின் போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம். அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(வேலணை மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும், சத்தியசீலன்(வவுனியா), சத்தியா(கிளிநொச்சி), ரூபா(யாழ்ப்பாணம்), அகிலசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து, லிங்கப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுகந்தி(வவுனியா), பாலகிருஸ்ணன்(கிளிநொச்சி), கமலநாதன்(அவுஸ்திரேலியா), மதிவதனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சிவயோகம், ஞானப்பூங்கோதை, மற்றும் அழகம்மா, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், மேனகன், ததுசன், றொசானா, கஜானா, கோகியன்(வவுனியா), அசோக், சங்கீத், லக்சிகா, சாருகன்(யாழ்ப்பாணம்), அஞ்சனா, நிருஜனா, மரிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||
|