வரலாற்றுச் சிறப்புமிக்க- நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க- நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

s (1)

 

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழா 12.09.2015 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடிய எம்பெருமான், அதனைத் தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேதரராய் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார்.  தீர்த்தத் திருவிழாவில்  இலட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அலங்காரக் கந்தன் எனப் போற்றப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில்,  25ஆம் நாள் உற்சவமாக தீர்த்தத் திருவிழா இனிதே நிறைவுற்றது.

ஞாயிறு மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கள் வைரவர் மடையும் இடம்பெற்று நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

s (2) s (4) s (3) s (5) s (6) s (7) s (8) s (9) s (10) s (11) s (12) s (14) s (15) s (16) s (17) (1) s (18) s (19) s (20) s (21) s (22) s (23)

Leave a Reply