தீவகத்தைச் சேர்ந்த,தம்பதிகளின் மரணம்-பரிஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது-ஒரு தரம் படித்துப் பாருங்கள்!

தீவகத்தைச் சேர்ந்த,தம்பதிகளின் மரணம்-பரிஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது-ஒரு தரம் படித்துப் பாருங்கள்!

gf

தனது அன்புக் கணவர் இறந்த செய்தினைக் கேள்வியுற்றதும்-திடீர் அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரை விட்டார் அன்பு மனைவி-இச்சம்பவம் பரிஸில்  இடம் பெற்றது.

யாழ் தீவகம் வேலணையைப் பிறப்பிடமாகவும்-புங்குடுதீவை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் கடந்த 07.09.2015 அன்று மாரடைப்பினால் பரிஸில் காலமானார்-

இவர் இறந்த செய்தியினை  இவரது அன்பு மனைவியிடம் சில மணி நேர இடைவெளியில் தெரிவித்த போது -தனது கணவரின் இழப்பினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏற்பட்ட மாரடைப்பினால் தனது கணவருடனேயே அவரும் உடனடியாகவே இறைவனடி சேர்ந்து விட்டார்.

இவ்விருவரின் இறுதிக்கிரியைகளும் 14.09.2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புடனும்,விட்டுக்கொடுப்போடும் அந்நியோன்யமாக வாழ்ந்து ஒரே நாளில் இறைவனடி சேர்ந்த அந்த முதியோர்களின் மரணம்-புலம்பெயர் மண்ணில் வாழும் எமது புதிய தலைமுறையினர்களின் இன்றை குடும்ப வாழ்வுக்கு  முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணியே இதனை நாம் பதிவு செய்கின்றோம்.

எம் தீவகத்தினைச் சேர்ந்த,இத்தம்பதியினரின் மறைவுக்கு-எமது இணையத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியினை காணிக்கையாக்குவதோடு-தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல  இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

09_103

20150909_134233 20150909_134211

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux