தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஈழத் திருநாட்டின் வட புலத்தில் யாழ். மண்ணில் நல்லை நகரில் கோவில் கொண்டு எழுந்தருளிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 24ஆவது நாளான 11.09.2015 வெள்ளிக்கிழமை அன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து உள்வீதியுலா இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து காலை 8மணியளவில் ஆலயத்தின் வெளியே வந்த முருகப்பெருமான் தேரில் ஆரோகணித்து ஆலயத்தை சுற்றி வெளி வீதியுலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
அலங்காரக்கந்தனின் இப்பெருவிழாவை நேரில் கண்டு அருள்பெற நாட்டின் பலபாகங்களிலிருந்தும் புலம் பெயர்நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.
அடியார்கள் அங்கப்பிரதட்சைகள், தீச்சட்டிகள், காவடிகள் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படத் தொகுப்பு என்பவற்றினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அனுசரணை…..
நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் பதிவுகளுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்….
பரிஸில் புகழ் பெற்ற…………..
தங்க நகைகளின் சுரங்கம்….
தமிழ் மக்களின் நம்பர்-01 தெரிவு…..