அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி 06.09.2015 ஞாயிறு இரவு இடம்பெற்ற திருக்கல்யாணத் திருவிழாவுடன் அலங்காரத்திருவிழா நிறைவடைந்தது.
இம்முறை என்றுமில்லாதவாறு காவடி-தீச்சட்டி-அங்கப்பிரதட்டை என்று பக்திபூர்வமாக திருவிழா மேலும் சிறப்பாக இடம் பெற்றதாக தெரியவருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 10ஆம் நாள் இரவு நடைபெற்ற-திருக்கல்யாணத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் வருடாந்த அலங்காரத் திருவிழாக்கள்-அனைத்தையும்-முன்பக்கத்தில் ஆன்மீகம் என்னும் பகுதியில் அழுத்தி எப்போதும் முழுமையாகப் பார்வையிடலாம்.