தீவகம் வேலணையில் குருதிச் சோகை உடைய 30 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில் குருதிச் சோகை உடைய 30 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

11058398_863784417004673_4066442889497347931_n

தீவகம் வேலணைப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட குருதிச் சோகையுடைய 1-5 வயதிற்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள ஊட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.

சங்கானை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தியின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு வேலணை பிராந்திய சுகாதார பணிமனையில் 9.9.2015 புதன்கிழமை அன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தீவக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி லயன் டாக்டர் குகதாசன், மற்றும் சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜெ.றஜீவன், நிகழ்ச்சி திட்டத் தலைவர் லயன் பெண்மணி மயூரிக்கா மேலும் மருத்துவர்கள் அ.ஜெயக்குமார், லயன் பெண்மணி மேரிமெற்லின் மற்றும் வேலணைப் பிரதேசத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு.கபிலன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டே இவ்மருத்துவ உதவி வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும்.

படங்கள்-விபரங்கள்..முகநூல் நண்பர்-திரு Rajeevan Jeyachandramoorthy

11231768_863783430338105_2531213402563985932_o 11951597_863783297004785_910497708515134281_o 11954724_863784117004703_1379482929963990808_n 11954778_863784317004683_7064293382572040980_n 12004878_863783850338063_3368567858532480404_n 12006183_863784297004685_6004323506294950027_n 12006315_863784147004700_4239090025186437532_n 12002761_863783573671424_5488578416351937731_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux