“குமுதினி” இப்பெயர் தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே மறக்க முடியாது செதுக்கப்பட்டுள்ளது. இப்பெயரை உச்சரிக்கும் உதடுகள் இன்றும் கூட துக்கத்தால் ஒரு கணம் ஒன்றோடு ஒன்று ஒட்ட மறுக்கின்றன.
நெடுந்தீவு மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த குமுதினி- தனது தள்ளாடும் வயது வந்தும் தான் ஓய்வு எடுக்க விரும்பாமல் கடலில் மகிழ்ச்சியோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென கடந்த சில வாரமாக குமுதினி கைவிடப்பட்ட நிலையில் காட்சி தருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..
இது விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு-குமுதினி மீண்டும் மக்களோடு கடல்மீது பயணிக்க வழிசெய்ய முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்- குமுதினியில் பயணித்த நன்றி மறவாத மக்கள்-