நல்லூர் பெருந்திருவிழாவில் குற்றம் புரிவோருக்கு பிணையின்றி கடும் தண்டனை-நீதிமான் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் பெருந்திருவிழாவில் குற்றம் புரிவோருக்கு பிணையின்றி கடும் தண்டனை-நீதிமான் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் ஆலயப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாக்கள் ஆரம்பித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கலாசார சீரழிவுகள் தொடர்பாகவும் மற்றும் குற்றங்கள் புரிபவர்கள் கைது செய்யப்பட்டால் பிணை வழங்கப்படமாட்டாது என்பதுடன் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் இவ்வாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் உள்ளவரின் பிணைமனு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலயத்தில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்த ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இந்தத் திருவிழாக்களில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நல்லூருக்கு வருகை தருவார்கள்.

தற்போதைய சூழலில் இம்முறை நல்லூர் தேர் மற்றும் தேர்த் திருவிழாக்களில் மாத்திரம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.இத்தகைய திருவிழாக்காலங்களில் கலாசாரக் குற்றங்கள் மற்றும் திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

குற்றச் செயல்களை தடுப்பதே போலீசாரின் நோக்கம். அதற்கு உதவியாக நீதிமன்றங்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டியது காலத்தின் கடமை எனத் தெரிவித்துள்ள நீதிபதி, நல்லூர் தேர்,மற்றும் தீர்த்தத் திருவிழாக்களில் பொதுமக்களின் பொறுப்பு, கடமைகள் என்பவற்றை சுட்டிக்காட்டி, குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

குற்றம் நடைபெற்றதன் பின்னர் கைது செய்வதை விட, குற்றம் நடைபெறாமல் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். பொலிசாரின் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொது மக்களின் கடமை.பெறுமதியான தங்கநகை ஆபரணங்களை தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழாக்களில் அணிவதை தவிர்த்தல் நல்லது.தங்கமுலாம் இடப்பட்ட நகைகளை அணிவது சிறந்தது.இதனை செய்வதன் மூலமாக சங்கிலி அறுப்பு உள்ளிட்ட தங்கநகைத் திருட்டுக்களைத் தவிர்க்கலாம்.பெருமளவு பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பதும் நல்லது.பிக்பாக்கெட் ஆசாமிகள் யாழ். மாவட்டத்தில் மட்டுமல்ல வெளிமாவட்டங்களிலிருந்தும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் பெருமளவு பணத்தைக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பிக்பாக்கெட் சங்கிலி அறுப்பு நடைபெறும் சந்தர்ப்பங்களில் அவர்களை பொது மக்கள் பிடித்து அருகில் உள்ள பொலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்க முடியாத சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பொலீசாரிடம் ஒப்படைப்பது வரவேற்கத்தக்கது.

நல்லூரில் ஆலயத்துக்கு செல்லும் போது, தமிழருக்குரிய கலாசார உடைகளை அணிந்து செல்ல வேண்டும். கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் உடைகளை அணிவதை வெளிநாட்டில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.ஆண்கள் முக்கால் காற்சட்டை அணிவதையும், பெண்கள் முக்கால் காற்சட்டை அணிவதையும் தவிர்ப்பதுடன், எமது கலாசாரத்துக்கு ஒவ்வாத உடைகளை அணிவதைத் தவிர்த்து தமிழ் இந்து மணம் கமழும் உடைகளை அணிவதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பெண்களுடன் சேட்டை விடும் இளைஞர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது, மதுபானம் அருந்தி விட்டு வரும் நபர்கள் அவ்விடத்தில் நிற்கும் பொலீசாரால் கைது செய்யப்படுவார்கள். சிகரெட் பாவனை நல்லூர் பிரதேசம் முழுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. உணவகங்களில் திடீர் பரிசோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது நீதிமன்றத்தின் விசேட உத்தரவுக்கமைய பொலீசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். 

10482708_925027487567839_5459191724217036944_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux