சிரியா உட்பட மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஜேர்மன் நாட்டிற்குள் சுமார் 12ஆயிரம் அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்ரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக இவர்கள் முன்சன் மற்றும் ஹம்பேர்க் நகரங்களை சென்றடைந்துள்ளனர்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெர்மனிக்குள் வரும் பெருமளவிலான குடியேறிகளின் தேவைகளை சமாளிப்பதற்காக ஆறுநூறு கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றை ஜெர்மனி அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு சட்டங்களை கடந்த வார இறுதியில் தற்காலிகமாக தளர்த்தியதன் மூலம் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தைத் தான் தடுத்திருப்பதாகவும் ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.