மண்கும்பான் வர்த்தகர் ஒருவரினால் -அல்லைப்பிட்டி றோமன் க.வித்தியாலயத்திற்கு 5 பரப்புக் காணி அன்பளிப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வர்த்தகர் ஒருவரினால் -அல்லைப்பிட்டி றோமன் க.வித்தியாலயத்திற்கு 5 பரப்புக் காணி அன்பளிப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க.வித்தியாலயத்திற்கு 100 அடியில் பாடசாலைக்குத் தேவையான புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான நிலத்தினை,மண்கும்பானைச் சேர்ந்த,வர்த்தகர் ஒருவர் வாங்கி வழங்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஊடாக எமது இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது…

இலங்கை கல்வி அமைச்சினால்,அல்லைப்பிட்டி றோமன் கத்கோலிக்க வித்தியாலயத்திற்கு 100 அடியில் புதிய கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு வேண்டிய நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும்-ஆனால் கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நிலம் இல்லாமையினால்-நிலத்தினை பெறுவதற்கான கடும் முயற்சியில் அதிபர் என்.பத்மநாதன் அவர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே-மண்கும்பானைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 5பரப்பு நிலத்தினை தனது பெயருக்குப் பதிவு செய்து பின்னர் பாடசாலைக்கு  கட்டிடம்அமைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தகர் தனது பெயரினை வெளியிட வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கேட்டுக் கொண்டதனால் அவரது பெயரினை வெளியிடவில்லை என்பதனை மேலும் அறியத் தருகின்றோம்.

அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த,அமரர் சுப்பிரமணியம் அவர்களுடைய தோட்டக்காணியே வர்த்தகரினால் வாங்கப்பட்டு-பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலையின் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நிலமாகும்.

மண்கும்பான் வர்த்தகரினால்-றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு நிலம் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து-பொதுமக்களினால் சிரமதானமூலம் நிலம் துப்பரவு செய்யப்படுவதனை கீழே உள்ள படங்களில் நீங்கள் காணலாம்.

அதிபர் திரு பத்மநாதன் அவர்களின் விடாமுயற்சியின் பலனாகவே-இந்நிலம் பாடசாலைக்கு கிடைத்திருப்பதாக பெற்றோர்களில் சிலர் எமது இணையத்திற்குத் தெரிவித்தனர்.

விரைவில் பாடசாலைக்கான புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது. 

image-0e1323b0695d422e0f58ac823f8a206ad7f8a924ad8fd4c8bdb0e5f9128b4dfd-V (1) image-0a7783c06aae7276096831d9596e59d55c0d4422626fb8a61fda14de29097be7-V image-0b4a18235c1ae12923c300518c0601a1c0a50afae48cfb594b63496ee7353851-V image-1be00e335a79d020f0799d9d677bfae9f46f3a372f92ccf1977250af2b609762-V (1) image-387ef0709708062198d18975e2fc59a3f59901d49f4b44af263d1f44421b5fa5-V image-b9fc3d4d7444c7a9a17836be094d826e130ff2da108ff6ced05da890afc08b49-V image-e572c4a83e356e61f3a32e4090257ca7e591de01dd3035c990fa0b93bd600fa2-V

Leave a Reply