4 பிள்ளைகளை பஸ்சில் தவிக்கவிட்டு மைத்துனருடன்******

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதர னுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் அளவத்துகொட பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப் பட்டுள்ளனர். இது குறித்துக் கூறப்பட்டவை வருமாறு:

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் தவிக்கவிட்டு 
தலைமறைவாகிய பெண் மைத்துனருடன் கைது

நுவரெலியா, ஓக.30
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதர னுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் அளவத்துகொட பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப் பட்டுள்ளனர்.
இது குறித்துக் கூறப்பட்டவை வருமாறு:
கண்டி, ரங்கலை பொலிஸ் பிரிவில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின் தாயான இப்பெண் தனது கணவனின் சகோதர னுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டி ருந்தார் எனக் கூறப்படுகிறது.
சம்பவதினம் எவருக்கும் தெரியாமல் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பஸ் ஒன்றில் சற்றுத் தூரம் சென்ற இவர் இடையில் அவர்களை பஸ்ஸில் அநாதரவாக விட்டுவிட்டு மைத் துனருடன் தலைமறைவாகிவிட்டார்.
சிறிது நேரத்தில் பஸ் ஊழியர் சந்தேகம் வந்து விசாரித்தபோது தாயைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. பிள்ளைகள் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை அளவத்துகொட நகரில் சந்தேகத்திற்கிட மான முறையில் நடமாடிய இவர்களிரு வரை யும் பொலிஸார் கைது செய்து விசாரித்த போதே இந்த விடயம்அம்பலத்திற்கு வந்துள்ளது.
மேற்படி பெண்ணால் கைவிடப்பட்ட குழந்தைகள் 11, 09, 07, 05 வயதையுடை யவர்கள். இந்த நான்கு குழந்தைகளும் தற்போது சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனப் பொலி ஸார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட தாயும், அவரது மைத்துனரும் பன்விலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் எனப் பொலி ஸார் தெரிவித்தனர்.
Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux