வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்குப் பக்கமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேரவாசல் நவதள இராஜகோபுர கும்பாபிஷேகம் 04.09.2015 வெள்ளிக்கிழமை கார்த்திகைத் திருவிழாவன்று காலை 6 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.
நல்லூர்க் கந்தனுக்கு மூன்றாவது இராஜ கோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த வருடம் ஆரம்பமாகி துரித கதியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இராஜகோபுரத்துக்கான முடிவைக்கும் நிகழ்வு இவ்வருட மகோற்சவம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நடைபெற்றிருந்தது.
அத்துடன் இராஜகோபுரத்தில் வேல்வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-குபேரவாசல் கும்பாபிஷேகத்தின் சிறிய பகுதி ஒன்றினை உங்கள் பார்வைக்குகீழே இணைத்துள்ளோம்.
நிழற்படங்கள்…திரு ஜங்கரன் சிவசாந்தன்