ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இரட்ணேஸ்வரன்-தவமணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் விதுஷன் தனது 18வது பிறந்த நாளினை-பெற்றோரின் விருப்பப்படி-அல்லைப்பிட்டியில் வசிக்கும் தனது அம்மம்மாவின் இல்லத்தில் கடந்த மாதம் வெகு சிறப்பாக கொண்டாடினார்.
செல்வன் விதுஷன்-அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த,காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் பேரனாவார்.
ஜெர்மன் நாட்டில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வருகின்ற போதிலும்-தனது அம்மம்மா வசிக்கின்ற ஊருக்குச் சென்று-அவரது உறவினர்கள்-ஊரவர்கள் என அனைவரையும் அழைத்து தனது பிறந்த நாளினைக் கொண்டாடி-அனைவருக்கும் சிறப்புணவு வழங்கி சந்தோஷப்படுத்திய-செல்வன் விதுஷனின் பிறந்த நாள் விழாவானது-புலம்பெயர்ந்து வாழும் புதிய தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்-என நாம் நம்புகின்றோம்
செல்வன் விதுஷனை,அவரது உறவினர்களுடன் இணைந்து-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் அருளால் கல்வியில் மேலும் சிறந்து விளங்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டி அல்லையூர் இணையமும் வாழத்துகின்றது.